மூலம் குறைய

  1. காட்டுக்கருணை -100 கிராம்
  2. கறிக் கரணை-100கிராம்
  3. பிரண்டை-25கிராம்
  4. புளியமடல்-25கிராம்
  5. நுணாஇலை-25கிராம்
  6. கொடி வேலி வேர்பட்டை-25கிராம்
  7. அரிசித்திப்பிலி-25கிராம்
  8. நிலவேம்பு-25கிராம்
  9. அதிமதுரம்-25கிராம்
  10. சீரகம்-25கிராம்
  11. பெருங்காயம்-25கிராம்
  12. வெட்பாலையரிசி-25கிராம்
  13. விளாவரிசி-25கிராம்
  14. வெள்ளைப்பூண்டு-25கிராம்
  15. அதிவிடயம்-25கிராம்
  16. மிளகு-25கிராம்
  17. கடுகு-25கிராம்
  18. கடுகுரோகணி-25கிராம்
  19. கருஞ்சீரகம் – 25 கிராம்
  20. நிலஆவாரை -25 கிராம்

 

  1. செய்முறை
  • காட்டுக் கரணை, கறிக் கரணை இரண்டையும் தோல் நீக்கி ஈர்க்கு கனத்தில் சிறுதுண்டுகளாக வெட்டி நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். வெள்ளைப்பூண்டு இந்துப்பு நீங்கலாக மற்ற மருந்துச் சரக்குகளை நிழலில் நன்கு உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும்.
  • வெள்ளைப் பூண்டை பசும் பாலில் அவித்து நிழலில் உலர்த்த வேண்டும். எல்லா மருந்துச் சரக்குகளையும் மீண்டும் உரலில் போட்டு இடித்து வடிகட்டி அதன் பின் இந்துப்பை இடித்துப் போட்டு 72 மணி நேரம் காற்றுப் புகாமல் வைத்திருந்து மருந்தைப் பத்திரப்படுத்தவேண்டும்
  • .காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன் 6 கிராம் தூளுடன் 1 தேக்கரண்டி வெல்லம் கலந்து பிசைந்து மருந்தை உட் கொண்டு சிறிது பசும் பால் அல்லது வெந்நீர் குடிக்கவேண்டும். இதுபோல் மாலை 6 மணிக்கும் மருந்துண்ணவேண்டும். 40 நாட்கள் மருந்தை சாப்பிட வேண்டும்.

 

Show Buttons
Hide Buttons