வீக்க மாந்தம்

குழந்தை சுரத்துடன் மாந்தத்தின் அறிகுறிகள் எல்லாம் காணும். கண்ணும் காதும் வீங்கி இருக்கும். உதடு, நாக்கு , வாய் முதலியவைகள் புண்பட்டிருக்கும். கை கால் சோர்ந்துவிடும்.

மருந்து

பூவரசம் பழுப்பு இலை – 20 கிராம்
சங்கன் வேர் பட்டை – 10 கிராம்
சீந்தில் தண்டு – 10 கிராம்
துளசி – 20 கிராம்
முள்ளி வேர் – 20 கிராம்
முருங்கை ஈர்க்கு – 20 கிராம்
நீர்முள்ளி வேர் – 20 கிராம்
தைவேளை வேர் – 20 கிராம்
தூதுவளை இலை – 10 கிராம்
சிறுகுறிஞ்சான் கொழுந்து – 20 கிராம்
சத்திசாரனை வேர் – 10 கிராம்
சுக்கு – 20 கிராம்
ஓமம் – 20 கிராம்
சதக்குப்பை – 20 கிராம்
சீரகம் – 20 கிராம்

இவற்றை பொடி செய்து இரு லிட்டர் தண்ணிரில் போட்டு ஆழக்காகக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் காலை, மாலி கொடுத்து வரவேண்டும்.

உப்பு ,புளி தள்ளுபடி பத்தியம்.

Show Buttons
Hide Buttons