குழந்தைக்கு சுரம் நின்று நின்று வரும். அரைக்கு கீழ் குளிர்ந்திருக்கும். நாவறட்சி உண்டாகும். தலை நேரே நிற்காமல் சாய்ந்து விழும். நாசி வழியாக நீர் வடிந்து கொண்டே இருக்கும். உடல் சோர்ந்து காணப்படும். ஒவ்வொரு சமயம் வயிறு சப்தத்துடன் இரைந்து மலம் கழியும்.
மருந்து
ஓமம் – 20 கிராம்
வசம்பு – 10 கிராம்
நுணா வேர் – 20 கிராம்
நொச்சி வேர் – 20 கிராம்
தைவேளை வேர் – 20 கிராம்
பொடுதலை – 20 கிராம்
வெள்ளைப்பூண்டு – 20 கிராம்
இவைகளை பொடி செய்து ஒரு படி நீரிலிட்டு ஆழாக்காகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் காலை, மாலை கொடுத்து வரவும்.