ஒன்று முதல் 10 வரையுள்ள மருந்துச் சரக்குகளை ஒன்றாகப் போட்டு இடித்து ஒரு மரத்தட்டில் போட்டு 2 மணி நேரம் வெயிலில் காய வைத்து மீண்டும் இடித்து வடிகட்டவும்.
காட்டுக் கருணைக் கிழங்கைக் குறிப்பிட்டுள்ள எடை அளவுக்கு 4 மடங்கு அதிகமாக எடுத்து தோலை நீக்கி ஈர்க்கு கனத்தில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மண் தட்டில் போட்டு நிழலில் உலர்த்த வேண்டும்.
இது போல் கறிக்கருணை, சேப்பங்கிழங்கு இவைகளையும் செய்து ஈரம் உலர்ந்ததும் மூன்று கிழங்குகளையும் கல் உரலில் போட்டு நன்றாக இடித்து வடிகட்டி எடையளவு நிறத்திக் கொள்ளவேண்டும்.
மூன்று கிழங்குகளையும் காய்ந்த பின் எடையளவு நிறுத்தி இடிக்க வேண்டும். புளியம் பிரண்டை, பேய்ப் பிரண்டை, நல்ல பிரண்டை இவைகளை இரு துண்டுகளாக வெட்டி நிழலில் உலர்த்தி எடையளவு நிறுத்தி இடித்து வடிகட்டி கொள்ளவேண்டும்.
பனைவெல்லத்தை இடித்து கடாயில் போட்டு சிறிது சூடு ஏறியதும் மருந்து சரக்கைப் போட்டு உடன் தேனையும் ஊற்றி நன்றாக் கிண்டி நெய்யை ஊற்றிக் கிண்டி ஆறியதும் மருந்தைப் பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும்
உபயோகிக்கும் முறை
காலை உணவுக்கு ஒரு மணி முன் 15 இளகலுடன் சிறிது ஆறிய வெந்நீர். பகல் உணவுக்கு ஒரு மணி முன் 15 கிராம் இளகலுடன் சிறிது ஆறிய வெந்நீர். இரவு உணவு உண்டு 30 நிமிடங்கள் கழித்து 15 கிராம் இளகலுடன் சிறிது பசும்பால் குடிக்கவேண்டும்.