அதிசாரச் சுரம்

குழந்தைக்கு அதிகமாக உஷ்ணத்தினால் சீரணக் கருவிகள் அழற்சி கண்டு சுரம் ஏற்படுகிறது. மலத்துடன் சளியும் , ரத்தமும் விழும். சரீரம் வெளுக்கும்.கைகால் சோர்ந்து விடும். சீதபேதியுடன் சுரமும் காணும்.

மருந்து

சுக்கு – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
மிளகு – 15 கிராம்
சாதிக்காய் – 15 கிராம்
கிராம்பு – 15 கிராம்
சீமைஅதிவிடயம் – 15 கிராம்
கழற்சிப் பருப்பு – 15 கிராம்
சீரகம் – 15 கிராம்
ஓமம் – 15 கிராம்
கடுக்காய்ப் பூ – 15 கிராம்
சிறு தேக்கு – 15 கிராம்
இலவம் பிசின் – 15 கிராம்
விளாம் பிசின் – 15 கிராம்
வில்வப் பிசின் – 15 கிராம்
மாதுளம் பிஞ்சு – 15 கிராம்
வில்வப்பழச் சதை – 15 கிராம்

இவற்றை எல்லாம் ஒன்றாக ஒரு மண் சட்டியில் போட்டு பசு நெய் சிறிது விட்டு வறுத்து வடிகட்டிய தயிர்த் தண்ணியில் விட்டு மை போல அரைத்து ஒரு கழற்சிக்காய் அளவு ஒரு அவுன்சு தயிர்த் தண்ணீரில் கலக்கிக் கொடுக்கக் குணமாகும்.

 

Show Buttons
Hide Buttons