இன்புளுவென்சா சுரம்

குழந்தைக்கு சளியோடு சுரம் அடிக்கும். விஷக்கிருமிகளால் ஒருவரோடு தொற்றும் நோயாகும். குழந்தைக்கு தலைவலி, கைகால் அசதி, வலி , தொண்டைப் புகைச்சல் , வயிற்றோட்டம் காணும்.

மருந்து

ஆடாதோடை இலை – 30 கிராம்
சிறுகான்சொறி – 30 கிராம்
வேப்பிலை – 30 கிராம்
கோரைக்கிழங்கு – 15 கிராம்
சுக்கு – 15 கிராம்

இவற்றை நையத் தட்டி ஒரு லிட்டர் நீரில் போட்டு 1/8 லிட்டராகச் சுண்டக்காய்ச்சி வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் தினசரி 3 வேலைக்க்கு கொடுக்க குணமாகும்.

மருந்து 2

கடுக்காய்ப் பூ – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
மதுக்காரை – 15 கிராம்
கோஷ்டம் – 15 கிராம்

ஒன்று சேர்த்து சூரணம் செய்து, வஸ்திரக்காயம் செய்து 5 கிராம் எடை சூரணம் செய்து 3 வேளை தேனில் குழப்பிக் கொடுக்க குணமாகும்.

Show Buttons
Hide Buttons