முட்டைகோஸ் துவையல்

தேவையானப்பொருட்கள்:

முட்டைகோஸ் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் – 3 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் – 5
சீரகம் – சிறிது
தக்காளி – 1
புளி – சிறிது
உளுத்தம்பருப்பு – சிறிது

துவரம்பருப்பு – சிறிது

கடலைப்பருப்பு– சிறிது

நல்லெண்ணெய் – சிறிது
கறிவேப்பிலை.

செய்முறை:

1.அனைத்து பொருளையும் தயாராக எடுத்து கொள்ளவும்.
2.அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சூடானதும் அதில் அனைத்து பருப்புகளையும் போட்டு வதக்க வேண்டும்.
3.பின்னர் அதில் கறிவேப்பிலை, மிளகாய்வற்றல், முட்டைகோஸ், தக்காளி, தேங்காய், சீரகம் போட்டு வதக்க வேண்டும்.
4.நன்கு அனைத்தும் வதங்கியதும் அதை ஆற வைத்து புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் சுவையான முட்டைகோஸ் துவையல் தயார்.
5.நரநரஎன்று அரைத்து கொள்ளவேனும். நைசாக அரைக்க வேண்டாம்.

Show Buttons
Hide Buttons