சுண்டைக்காய் துவையல்

தேவையான பொருட்கள்:

பச்சை சுண்டைக்காய் – அரை கப்
பச்சை மிளகாய் – கால் கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் (விரலிமஞ்சள் கிடைத்தால் நல்லது. அதையே ஒரு துண்டு வைத்துக்கொள்ளலாம்)
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
வெந்தயம் – கால் டீஸ்பூன்

செய்முறை:

1.சுண்டைக்காயை காம்பு நீக்கி நசுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். இப்படிச் செய்தால் விதைகள் வந்துவிடும். வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், மஞ்சள்தூள் (அல்லது) மஞ்சள், பெருங்காயம், புளி, உப்பு, வறுத்த வெந்தயம் எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும்.
2.பாதி அரைபட்டிருக்கும் போது சுண்டைக்காயையும் போட்டு அரைத்து பெருபெருக்கையாக எடுத்துவிடவும். இந்தத் துவையல் சுவையாக இருக்கும்.

Show Buttons
Hide Buttons