பாட்டிவைத்தியம் (naturecure)
நீர் எரிச்சல் குணமாக
வல்லாரை, கீழாநெல்லி சேர்த்து அரைத்து 1 கிராம் அளவு தயிருடன் கலந்து காலையில் சாப்பிடவும்.
நீர்சுருக்கு குணமாக
இளம் தென்னை மட்டையை இடித்து பிழிந்த நீரை காலையில் குடித்து வந்தால் நீர்சுருக்கு தீரும்.
சிறுநீர்க்கட்டு குணமாக
செம்பருத்தி பூவை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து பனங்கற்கண்டு பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்க்கட்டு குணமாகும்.
சிறுநீர் பாதை ரணம் தீர
சந்தனக்கட்டையை பாலில் உரைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் பாதை ரணம் தீரும்.
கண்சூடு குணமாக
துளசி விதை, அரச விதைகளை அரைத்து காய வைத்து சிறு உருண்டைகளாக்கி சாப்பிட்டு வந்தால் கண்சூடு தீரும்.
தலைபாரம் குணமாக
சிறுதேள் கொடுக்கு இலையுடன் நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி உடல், தலைக்கு தேய்த்து குளித்து வர குணமாகும்.
தலைபாரம் குணமாக
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு ஆகியவற்றை பொடியாக்கி சேர்த்து துணியில் கட்டி நுகர தலைபாரம், மூக்கடைப்பு குணமாகும்.
நீர்க்கோர்வை குணமாக
நல்லவேளை செடியை இடித்து பிழிந்து சக்கையை தலையில் வைத்து கட்டினால் நீர்கோர்வை தீரும்.
தலைபாரம் சரியாக
இஞ்சி சாறு, பால், நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி தலைக்கு வாரம் ஒரு நாள் தேய்த்து குளிக்கலாம்.