பாட்டிவைத்தியம் (naturecure)
வெட்டுக் காயம் ஆற
கருஞ்செம்மை இலையைத் தேவையான அளவு எடுத்து அம்மியில் அறைத்து வெட்டுக் காயம் மேல் போட வெட்டுக் காயம் ஆறும்
கழிச்சல் நோய் குறைய
கருவேலமர துளிர் இலைகளை 5 கிராம் அளவுக்கு மசிய அரைத்து மோரில் கலக்கிக் காலை மாலையாகக் குடித்து வரச் சீதக் கழிச்சல்,...
தோல் அரிப்பு குறைய
கீழாநெல்லி இலையை அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் அரிப்பு குறையும்.
பித்தம் குறைய
அன்னாசி பழ வற்றல்களை பாலில் ஊற வைத்து தினமும் காலை, மாலை சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
வாய்வு கோளாறு குறைய
முருங்கை கீரையில் மஞ்சள், பூண்டு, உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் குறையும்
உடல் பலம் பெற
அமுக்குராக் கிழங்கை பாலில் வேகவைத்து இடித்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
பித்தம் குறைய
அத்தி இலை சாறெடுத்து வெண்ணெய், தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க பித்தம் குறையும்.
சீதபேதி குறைய
உத்தாமணி இலைச்சாறு வேப்ப எண்ணெய் இரண்டையும் சம எடை எடுத்து காய்ச்சி இரண்டு அவுன்ஸ் கொடுக்க சீதபேதி குறையும்
குடல் பூச்சி தொல்லை குறைய
கொள்ளுக்காய் வேளை உல்ர்த்திய இலைப்பொடி 100 கிராம், பொட்டுக் கடலைப் பொடி 100 கிராம், துவரம்பருப்பு வறுத்தது 100 கிராம், மிளகு...