சுவாச அலர்ஜி குறைய
குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சுவாசநோய் அலர்ஜி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சுவாசநோய் அலர்ஜி குறையும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, இவற்றை பொடி செய்து பாலில் கலந்து தேன் சேர்த்து காலை, மாலை குடித்து வர தொண்டை வலி...
சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் இவற்றை பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட தொண்டை கரகரப்பு குறையும்.
இரண்டு கிராம் அதிமதுரப் பொடியை இரண்டு கிராம் தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குறையும்.
வேப்பிலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குறையும்.
அரிவாள்மனைப் பூண்டு பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் கலந்து சாப்பிட தொண்டையில் ஏற்பட்ட வறட் சி, கமறல் ஆகியவை குறையும்.
முருங்கை இலைச்சாறுடன் தேன் கலந்து,சுண்ணாம்பில் குழைத்துத் தொண்டையில் பூசிடத் தொண்டை வலி மற்றும் இருமல் குறையும்.
வெள்ளரி இலைகளோடு,சீரகம் சேர்த்து வறுத்துப் பொடியாக்கித் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைவலி குறையும்.
சீரக இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,தேனுடன் கலந்து அருந்தி வந்தால் தொண்டை வலி குறையும்.