மிளகாய் வறுக்கும்போது கமறாமல் இருக்க
மிளகாய், மிளகாய்ப் பொடி இவைகளை வறுக்கும் சிறிது உப்பை சேர்த்துக்கொண்டால் கமறல் வராது.
வாழ்வியல் வழிகாட்டி
மிளகாய், மிளகாய்ப் பொடி இவைகளை வறுக்கும் சிறிது உப்பை சேர்த்துக்கொண்டால் கமறல் வராது.
மஞ்சள் பொடியிலும், மிளகாய் பொடியிலும் சிறிது உப்பைக் கலந்து வைத்தால் பூச்சிகள் அண்டாது.
தேங்காய் எண்ணெயில் சுத்தமான உப்புக் கல்லைச் சிறிது போட்டு வைத்தால் எண்ணெய் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.
அலுமினியப் பாத்திரங்களில் உப்பு, புளி இவைகள் கலந்த பொருட்களை வைத்திருக்ககூடாது.உப்பிலும், புளியிலும் அலுமினியம் கரையும்.
பூக்குவளையில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு விட்டால் பூக்குவளையில் வைக்கப்படும் பூக்கள் நீண்ட நேரம் புதியவையாகவே இருக்கும்.
உருளைக்கிழங்கை சீவி ஒரு வெள்ளைத் துணியில் கட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் அமிழ்த்து வைத்து எடுத்த பிறகு குளிர்ந்த உப்பு...
முறுக்கு, காராபூந்தி, பிஸ்கட் வைக்கும் டின்களில் சிறிதளவு உப்பை ஒரு துணியில் முடிந்து போட்டு வைக்கவும். நமத்து போகாமல் மொரு மொருவென...
இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றும் போது சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது.
ஆம்லேட் ஊற்றிய வாணலியை உப்பால் தேய்த்து கழுவினால் சுத்தமாகும்.
முட்டைகளை வேக வைக்கும் போது சிறிது உப்பை சேர்த்து வேக வைத்தால் முட்டை தோலை சீக்கிரமாக உரித்து விடலாம்..