மெழுகுவர்த்தி உருகாமல் இருக்க
மெழுகுவர்த்தி உபயோகிக்கும் முன் சிறிதளவு உப்பை எடுத்து அதில் சில மணி நேரம் மெழுகுவர்த்தியை புதைத்து பற்ற வைத்தால் உருகாது. வெளிச்சமும்...
வாழ்வியல் வழிகாட்டி
மெழுகுவர்த்தி உபயோகிக்கும் முன் சிறிதளவு உப்பை எடுத்து அதில் சில மணி நேரம் மெழுகுவர்த்தியை புதைத்து பற்ற வைத்தால் உருகாது. வெளிச்சமும்...
எண்ணெய்ப்பிசுக்கான பாத்திரங்களை கழுவுவதற்கு முன் வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் கடுகு தூளைப் போட்டு கழுவினால் எந்த வித...
பிளாஸ்டிக் வாடை நீங்க சுடு நீரும் உப்பும் கலந்து சிறிது நிறம் வைத்து பின்பு சுடுநீர் கொண்டு கழுவினால் போதும்.
தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால் தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்கும்.
தக்காளி பழங்களை உப்பு தண்ணீரில் நனைத்து எடுத்து வைத்தால் சீக்கிரம் அழுகி போகாது.
சிவப்பு எறும்பு கடித்த இடத்தில் உப்புப் போட்ட இளஞ்சூடான நீரை விட்டு அலம்பினால் வலி மறைந்து விடும்.
காலில் அட்டைப்பூச்சி ஒட்டிக்கொண்டால் சிறிது உப்பையோ புகையிலையையோ போட்டால் பூச்சி சுருண்டு விடும்.
நெல்லி மரத்தின் கிளை ஒன்றை வெட்டி கிணற்றில் போட்டு வைத்தால் உப்பு நீர் மாறி விடும்.
துடைப்பம் வாங்கியதும் உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்து விட்டுப் பின் உலர வைத்துப் பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன்படுத்தலாம்.