பல் வலி குணமாக
கடுகை அரைத்து பொடி செய்து பல்வலி இருக்கும் இடத்தில் பற்றுப் போட்டால் விரைவில் பல் வலி குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
கடுகை அரைத்து பொடி செய்து பல்வலி இருக்கும் இடத்தில் பற்றுப் போட்டால் விரைவில் பல் வலி குணமாகும்.
கற்றாழை சோற்றையும், மஞ்சள் பொடியையும் அரைத்து விளக்கெண்ணெய் விட்டு சூடுபடுத்தி லேசான சூட்டில் நகத்தின் மீது பூச நகச்சுற்று வலி குறையும்.
படிகாரத்தை நன்கு பொடி செய்து நீர்விட்டுக் கெட்டியாகக் குழைத்து நகத்தின் மீது வைத்துக் கட்டலாம்.
சிறிதளவு வெங்காயத்தை எடுத்து பொடிப் பொடியாக நறுக்கி வலிக்கின்ற இடத்தில் வைத்தால் நீங்கிவிடும்.
சிலந்தி நாயகம் இலையை நன்கு நீர்விடாமல் அரைத்து நகத்தில் கட்டினால் நகச்சுற்று குறையும்.
படிகாரத்தையும், கடுக்காயையும் பொடி செய்து நீரில் கலந்து தினமும் வாய் கொப்பளித்து வர குணமாகும்.
சிறிதளவு நொச்சி இலை, சிறிதளவு மருதாணி இலை, எருக்கன்பூ இரண்டு சேர்த்து நன்கு மைப்போல் அரைத்து நகத்தில் கட்டினால் நகச்சுற்று குறையும்.