வைத்தியம்
நீர்க்கடுப்பு குறைய
புளியம் பூவை எடுத்து தண்ணீர்விட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு குறையும்.
சிறுநீரக எரிச்சல் குறைய
முருங்கைக் கீரையும்,வெள்ளரி விதையும் எடுத்து நன்கு அரைத்து வயிறு முழுவதுமாக பூசிவிட நீர்க்கட்டு உடைந்து சிறுநீரக எரிச்சல் குறையும்.
இருமல் குறைய
பொடுதலை இலைகளை சுத்தம் செய்து பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
நீர் கடுப்பு குறைய
வாழைத்தண்டை சுத்தம் செய்து இடித்து வடிகட்டி சாறு எடுத்து அதை மண்சட்டியில் விட்டு சுடவைத்து குடித்தால் நீர் கடுப்பு குறையும்.
சிறுநீர் எரிச்சல் குறைய
செம்பருத்தி இலைகளை, அரைத்துப் பசும்பாலில் இட்டு கலந்து, குடிக்க சிறுநீர் எரிச்சல் குறையும்.
இருமல் குறைய
மிளகுடன், பொரிகடலை சேர்த்துப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் குறையும்.
சிறுநீர் எரிச்சல் குறைய
புதினா இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேன், எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர சிறுநீர் எரிச்சல் குறையும்.
இருமல் குறைய
ஒரு டம்ளர் பால் எடுத்து அதனுடன் 1 முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் கலந்து, 1 தேக்கரண்டி தேன் சேர்த்து சூடுபடுத்த...