புண்கள் குணமாக
அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.
ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவ புண்கள் ஆறும்.
முசுக் கொட்டை இலைகளோடு, வேப்பிலைகளைச் சேர்த்தரைத்து, நீண்டநாள் படுக்கையில் இருந்தால் ஏற்படும் படுக்கைப்புண் மீது பூசிவர படுக்கைப்புண் குறையும்.
அம்மான் பச்சரிசி கீரையுடன் சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் குடல் புண் குறையும்
நச்சுக்கொட்டைக் கீரை, பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட குடல்புண் குறையும்
வாகைப் பிசினை பொடி செய்து வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வர குடல் புண் குறையும்
துத்திக்கீரை கஷாயத்தைச் சர்க்கரை சேர்த்துத் தினமும் மூன்று வேளை அருந்தினால் குடல்புண் குறையும்
காரட் இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் குறையும்.