ஊறுகாயின் வடிவம் மாறாமல் இருக்க
எந்த ஊறுகாய் செய்தாலும் ஒரு துளி வினிகரை சேர்த்துக் கொண்டால் ஊறுகாய்த் துண்டுகளின் வடிவம் மாறாமல் இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
எந்த ஊறுகாய் செய்தாலும் ஒரு துளி வினிகரை சேர்த்துக் கொண்டால் ஊறுகாய்த் துண்டுகளின் வடிவம் மாறாமல் இருக்கும்.
ஆம்லேட் ஊற்றிய வாணலியை உப்பால் தேய்த்து கழுவினால் சுத்தமாகும்.
விரிசல் ஏற்பட்டு முட்டை ஓட்டுக்குள் இருந்து திரவம் கசிவதை தடுக்க வேக விடும் போது சில துளி வினிகரை விட்டால் போதும்.
முட்டைகளை வேக வைக்கும் போது சிறிது உப்பை சேர்த்து வேக வைத்தால் முட்டை தோலை சீக்கிரமாக உரித்து விடலாம்..
நல்ல முட்டை தானா என்பதை அறிய ஒரு கிண்ணத்தில் நீரை எடுத்து அதில் முட்டையை வைக்கவும்.புதிய முட்டையாக இருந்தால் கிண்ணத்தின் அடியில்...
முட்டைகளை வைக்கும் போது கூர்மையான பக்கம் கீழே வரும் படி நிற்க வைக்க வேண்டும். இப்படி வைத்தால் முட்டை சிக்கிரம் கெடாது.
மஞ்சள் பொடி ஒரு கிருமி நாசினி. உணவுப் பொருளில் சேர்த்தால் ஆரோக்கியம் நிலைக்கும்.
இறைச்சியை வேக விடும் போது தேங்காய் ஒட்டுத்துண்டுடன் வேக விட்டால் மிருதுவாக வெந்து பதமாக இருக்கும்,பிறகு ஓடுகளை எரிந்து விடலாம்.