குழம்பில் உப்பு அதிகமானால்
சாம்பாரில் உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து சாம்பாரில் கரைத்து விடவும்.
வாழ்வியல் வழிகாட்டி
சாம்பாரில் உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து சாம்பாரில் கரைத்து விடவும்.
கோதுமை மாவில் இளநீரை விட்டுப் பிசைந்து சப்பாத்தி செய்யவும்.சப்பாத்தி ருசி மிக்கதாக இருக்கும்.
கோதுமை மாவை அரைத்ததும் சலித்து சிறிது டேபிள் சால்ட்டைக் கலந்து வைத்தால் வண்டு வராது.
பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்து போகாமல் இருக்கும்.
அரிசி உப்புமா செய்யும் போது அரிசி நொய்யில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கலந்து பின் செய்தால் உப்புமா வாசனையாக இருக்கும்.
தேங்காய்ச்ச்சட்னிக்கு அரைக்கும் போது பச்சை மிளகாய்களை எண்ணையில் ஒரு வதக்கு வதக்கி அரைத்துத் தொட்டுக் கொள்ளலாம்.
கத்தரிக்காய் எண்ணெய் கறிக்கு வதக்கும் போது ஒரு ஸ்பூன் கட்டி தயிரை அதில் விட்டால் கத்தரிக்காய் கருப்பாக ஆகாமல் இருக்கும்.
சாம்பாரை நன்றாக கொதிக்க வைத்து இறக்கியவுடன் அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையும், கருவேப்பிலையும் போட்டு மூடி வைக்கவும். மணமாக இருக்கும்.
வெந்தயக்குழம்பு கொதிக்கும் போது இரண்டு உளுந்து அப்பளங்களைப் பொரித்து நொறுக்கிப் போட்டுக் குழம்பை இறக்கவும்.