சப்பாத்தி, பூரி சுவை அதிகமாக
கோதுமை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்தியோ பூரியோ எதுவானாலும் சுவை – வாசனை – சத்து...
வாழ்வியல் வழிகாட்டி
கோதுமை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்தியோ பூரியோ எதுவானாலும் சுவை – வாசனை – சத்து...
கத்தரிக்காய் கூட்டு அல்லது பொரியல் எது செய்தாலும் கொஞ்சம் கடலை மாவைத் தூவி 5 நிமிடம் கழித்து இறக்கினால் மணம் கம...
புதிதாக வாங்கிய அரிசி வடிக்கும் போது குழைந்தால் அரை மூடி எலுமிச்சைச்சாறு விட்டு இறக்கினால் பொல பொலவென்று இருக்கும்.
அதிரசம் கடிப்பதற்கு கரடு முரடாக இருந்தால் இட்லி குக்கரில் வேக வைத்து எடுத்தால் கடிப்பதற்கு மெதுவாக இருக்கும்.
ரவா லட்டு செய்யும் போது கையில் நெய்யைத் தடவிக் கொண்டு உருண்டை பிடியுங்கள். உருண்டையும் சுலபமாக வரும். வாசனையாகவும் இருக்கும்.
உளுந்த வடைக்கு மாவை நைசாக அரைத்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்துப் பிசைந்து வடை தட்டினால் புஷ்…புஷ்.. என்று வடை ஜோராக இருக்கும்.
பக்கோடா மொர மொரப்பாக இருக்க மாவைக் கலக்கும் போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரும் கலந்து கொண்டால் போதும்.
உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம் மாவைத் தூவி விட்டு சிப்ஸ் செய்தால் மொரமொரப்பாக இருக்கும்.
அப்பளத்தின் இருபுறமும் லேசாக கொஞ்சம் எண்ணெய் தடவி அப்பளத்தை தணலில் சுடவும். அப்பளம் எண்ணெய்யில் பொரித்தது போலவும், அதிக சுவையோடும் இருக்கும்.
நெய் வைத்திருக்கும் ஜாடியில் ஒரு துண்டு வெல்லத்தை போட்டு வைத்திருந்தால் நெய் மணம் மாறாமல் இருக்கும்.