வாத வலி குறைய
100 கிராம் ஆகாச கருடன் கிழங்குடன், 50 கிராம் வெங்காயம், 20 கிராம் சீரகம்சேர்த்து அரைத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில்...
வாழ்வியல் வழிகாட்டி
100 கிராம் ஆகாச கருடன் கிழங்குடன், 50 கிராம் வெங்காயம், 20 கிராம் சீரகம்சேர்த்து அரைத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில்...
தொட்டால் சிணுங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் குறையும்
சதாவேலி இலைகளை அரைத்து வாத வலி ஏற்பட்ட இடத்தில் பூசி வந்தால் வாத வலி குறையும்.
வாதநாராயணன் இலை சாறு ஒரு அவுன்ஸ் குடித்து வர வாத வீக்கம், குடைச்சல் வலி குறையும்.
மிளகாய் பூண்டு விதை கசாயம் செய்து 2 வேளை குடிக்க வாதநோய்,வாத வீக்கம் குறையும்.
முருங்கை இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம் மேல் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
வேலிப்பருத்தி இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம் பொடித்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குறையும்.
பூனைக்காலி வேரை முறைப்படி கஷாயமிட்டு முப்பது மி.லி.முதல் அறுபது மி.லி. வீதம் அருந்தி வர வாதம் குறையும்.
வேலிப்பருத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து பூசி வந்தால் வாதவலி குறையும்.