வீக்கம் குறைய
நஞ்சறுப்பான் இலைகளை உலர்த்தி பொடி செய்து நீரில் குழைத்து பூசினால் வலி, வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நஞ்சறுப்பான் இலைகளை உலர்த்தி பொடி செய்து நீரில் குழைத்து பூசினால் வலி, வீக்கம் குறையும்.
சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம் மீது கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
விளாமிச்சை வேரை நீரிலிட்டு நன்றாகக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் பித்தம் குறையும்.
அடிப்பட்டு வீக்கம் உள்ள இடத்தில் அரத்தையை அரைத்து மேல் பூச்சாக பூச குறையும்.
பேய் மிரட்டி இலைகளைச் சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கி, இளஞ்சூட்டில் வீக்கத்தில் வைத்துக் கட்டினால் வீக்கம் குறையும்.
வெள்ளெருக்கன் பழுத்த இலைகளை வேப்பெண்ணெயில் வதக்கி வீக்கம் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
ஆரைக் கீரைச் சாறில் ஒரு துண்டு இஞ்சியை சேர்த்து அரைத்துக் குடித்தால் பித்த நோய்கள் குறையும்.