இழுப்பு – வலிப்பு

குழந்தைக்கு கடுமையாக காய்ச்சல் இருந்தால், அதன் உடலை ஈரத் துணியால் துடைத்து, அதன் வெப்பத்தைக் குறைக்க வேண்டும். குழந்தையின் கைகள், கால்கள், மார்பு, முதுகு ஆகிய பாகங்களை ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு நிமிடங்களுக்கு தண்ணீரில் நனைத்துக் கொண்ட கைகளால் தேக்க வேண்டும். போர்வைகளைப் போர்த்தக் கூடாது. மலச்சிக்கல் இருந்தால் எனிமா கொடுத்து எடுக்கலாம்.

மருந்து

வெண்தாமரைப் பூவின் காம்புகளை நீக்கி இதழ்களை கால் லிட்டர் சுத்த நீரில் போட்டு அரைக்கால் லிட்டராக சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் சீனாக் கற்கண்டு போட்டு ஒரு அவுன்சு வீதம் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்க வலிப்பு நின்று விடும். தொடர்ந்து இந்தக் கசாயத்தைக் கொடுத்து வர வலிப்பு வரவே வராது.

குழந்தைகள் மூளை வியாதிகளை குணப்படுத்துவதில் ‘ வெண்தாமரைப் பூவிற்கு இணையான மருந்து கிடையாது.

 

Show Buttons
Hide Buttons