குழந்தையின் சரீரம் சதாகாலமும் உஷ்ணமாகவே இருக்கும். பகலை விட இரவில் உஷ்ணம் அதிகமாகும் .வயதுக்கு தக்க வளர்ச்சியின்றி உடல் இருக்கும். ஆகாரம் ருசிக்காது. ஆயாசம் அதிகமாக இருக்கும். நெஞ்சு, கூடு கட்டி உயர்ந்திருக்கும். கண் எரிச்சலுடன் சிடுசிடுப்பும் இருக்கும். வாய் நாற்றமடிக்கும்.
மருந்து 1
பேயன் வாழைப்பழம் – 25
சிற்றாமணக்கு எண்ணெய் – 1 லிட்டர்
பேயன் வாழைப்பழத்தை சுண்டு விரல் கனமான வில்லைகளாக நறுக்கி, சிற்றாமணக்கு எண்ணெயில் போட்டு, வெயிலில் வைத்திருந்து இரவு படுக்கைக்கு போகும் முன் ஒரு துண்டு வீதம் கொடுக்க கணை சூட்டைக் குறைத்து விடும்.
மருந்து 2
வல்லாரைச்சாறு – 1/2 லிட்டர்
வெந்தயம் – 50 கிராம்
சிற்றாமணக்கு எண்ணெய் – 1 லிட்டர்
வெந்தயத்தை பசுவின் பால் விட்டு அரைத்து, சாற்றுடன் கலந்து கரைத்து, எண்ணெயுடன் கலந்து அடுப்பில் ஏற்றி சிறிது தீயில் எரித்து வடித்து சீசாவில் பத்திரப்படுத்தவும்.
காலை , மாலை ஒரு தேக்கரண்டி கொடுக்க கணைச்சூடு குணமாகும்.
குழந்தைக்கு வாரம் இருமுறை அவசியம் எண்ணெய் ஸ்நானம் செய்விக்க வேண்டும். குளிர்ச்சியான ஆகாரம் கொடுக்க வேண்டும்.