உடல் பலம் பெற
தூதுவளை இலைகளை நன்றாக நெய்யில் வதக்கி பிறகு அரைத்து துவையல் போல செய்து சாப்பிட்டு வந்தால் கபக்கட்டு குறையும். உடல் பலம்...
வாழ்வியல் வழிகாட்டி
தூதுவளை இலைகளை நன்றாக நெய்யில் வதக்கி பிறகு அரைத்து துவையல் போல செய்து சாப்பிட்டு வந்தால் கபக்கட்டு குறையும். உடல் பலம்...
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து...
தூதுவளை இலைகளை எடுத்துத் துவையலாக்கி உண்டு வந்தால் வாத வலி மற்றும் உடல் வலி குறையும்.
பிரண்டை இலையுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.
உளுத்தம் பருப்புடன் இருவாட்சி இலையை வதக்கி அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வர வியர்வை நாற்றம் குறையும்.
கொத்தமல்லி இலை, மிளகாய், இஞ்சி, உப்பு, சேர்த்து துவையல் செய்து தினசரி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
விளாங்காய் சதைப்பற்றை, உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து பகல், இரவு சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறு அனைத்தும் குறையும்.
கொத்தமல்லி இலைகளை அரைத்து துவையல் வைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கோளாறுகள் குறையும்