கை
கை நடுக்கம் குணமாக
வெள்ளைத்தாமரை இதழ்களை கசாயம் வைத்து பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கை நடுக்கம் குணமாகும்.
கை வலி குறைய
புங்க இலையை பொடியாகக் நறுக்கி சிற்றாமணக்குஎண்ணெய் விட்டு நன்றாகக் வதக்கி வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் வலி குறையும்.
நகச்சுற்று குறைய
கற்றாழை சோற்றையும், மஞ்சள் பொடியையும் அரைத்து விளக்கெண்ணெய் விட்டு சூடுபடுத்தி லேசான சூட்டில் நகத்தின் மீது பூச நகச்சுற்று வலி குறையும்.
நகச்சுற்றுக்கு
படிகாரத்தை நன்கு பொடி செய்து நீர்விட்டுக் கெட்டியாகக் குழைத்து நகத்தின் மீது வைத்துக் கட்டலாம்.
நகச்சுற்று குறைய
சிலந்தி நாயகம் இலையை நன்கு நீர்விடாமல் அரைத்து நகத்தில் கட்டினால் நகச்சுற்று குறையும்.
நகச்சுற்று குறைய
சிறிதளவு நொச்சி இலை, சிறிதளவு மருதாணி இலை, எருக்கன்பூ இரண்டு சேர்த்து நன்கு மைப்போல் அரைத்து நகத்தில் கட்டினால் நகச்சுற்று குறையும்.
நகச்சுற்று குறைய
மஞ்சள், அருகம்புல்,சிறிதளவு சுண்ணாம்பு இவைகளை கலந்து பூசி வர நகச்சுற்று குறையும்.