இடுப்புவலி குறைய
கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டுவர இடுப்புவலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டுவர இடுப்புவலி குறையும்.
வெந்தயத்துடன் தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்
அம்மான் பச்சரிசி இலையை தூதுவளை இலையுடன் சாப்பிட்டு வர உடல் வலிமை பெரும்.
நச்சுக்கொட்டைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் வாய்வு கோளாறுகள் குறையும்
ஏல இலைச்சாறைத் தேனில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குறையும்
நிலவேம்பு இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் குறையும்
சீந்தில் கொடியை பொடிசெய்து பாலுடன் கலந்து சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும்.
5 செம்பருத்திப்பூக்களை எடுத்து சுத்தமான நீரில் காய்ச்சி, கால்பங்காக வற்றியபின் அதனை 3 வேளை பருகினால்உஷ்ண காய்ச்சல் குறையும்.
பெருங்காயத்தை சிறிது நெய்விட்டு பொரித்து பொடித்து வெல்லத்துடன் சேர்த்து அருந்திவர வயிற்றுவலி, வயிற்றுப்புசம் குறையும்
பூவரச மரத்தின் பழுப்பு இலைகளை வெயிலில் காயவைத்து, தீயில் சாம்பலாக்கி, அதைத் தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசிவர சொறி சிரங்கு குறையும்.