தலைபாரம் குணமாக
விளக்கெண்ணெய் ஊற்றிய திரிவிளக்கில் விரலிமஞ்சளை சுட்டு வரும் புகையை சுவாசத்தால் தலைபாரம் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
விளக்கெண்ணெய் ஊற்றிய திரிவிளக்கில் விரலிமஞ்சளை சுட்டு வரும் புகையை சுவாசத்தால் தலைபாரம் குணமாகும்.
வெள்ளருகு இலைகளை அரைத்து 5 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர அரிப்பு மறைந்து குணமாகும்.
கட்டுக்கொடி இலை மற்றும் வேப்பங்கொழுந்து சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் தேக எரிச்சல் நீங்கும்.
ஆவாரம்பூ மற்றும் பாசிபயறு மாவு சேர்த்து உடம்பில் பூசிக் குளித்தால் நமைச்சல் குறையும்.
கசகசா, இந்துப்பு, வால் மிளகு சேர்த்து பொடியாக்கி காலை, மாலை வெந்நீரில் சாப்பிட தீரும்.
தழுதாழை இலையை கொதிக்க வைத்து இளம் சூட்டுடன் பிடிப்பு உள்ள இடத்தில் தடவ குணமாகும்.
வாதமடக்கி மரத்தின் கொழுந்து இலைகளை சுத்தம் செய்து சாப்பிட்டு வந்தால் வாயு பிடிப்பு குணமாகும்.
ஆரஞ்சுபழ தோல்களை தண்ணிரில் கொதிக்க வைத்து கஷாயம் குடித்தால் வாயு தொந்தரவு குறையும்.
முற்றிய தேங்காயை திருகி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டிவந்தால் அண்டவாயு தீரும்.