குழந்தைக்கு உடல் வெப்பம் அடைந்து விடுவதால் குடலிலுள்ள வழுவழுப்பான பசை வறண்டு இந்நோய் ஏற்படுகிறது. மலம் கழியும் போது குடல், ஆசன வாய் எரியும். மலம் கழிந்தவுடன் மறுபடியும் மலம் வருவதைப் போல் இருக்கும். ஆசனவாய்க் கடுகடுப்பும், ஆயாசமும் படபடப்பும் ஏற்படுகிறது. அடிவயிற்றில் கடுகடுப்பும், வலியும் இருக்கும். ஆகாரம் வெறுப்பாக இருக்கும்.
மருந்து
அதிமதுரம் – 15 கிராம்
அதிவிடயம் – 15 கிராம்
சாதிக்காய் – 15 கிராம்
சீரகம் – 15 கிராம்
மாதுளம்பூ – 15 கிராம்
ஒன்று சேர்த்துப் புளியாரைச் சாறு விட்டு மைபோல் அரைத்து, சுண்டக்காய் அளவு மாத்திரைகளாக செய்து சீசாவில் பத்திரப்படுத்தவும்.
காலை, மாலை ஒரு அவுன்சு மாதுளம்பழச் சாற்றில் அல்லது காய்ந்த மாதுளம்பழத்தோல் கசாயத்திலாவது கொடுக்க உடனே குணமாகும்.
மருந்து 2
சதையுடன் காய்ந்த வில்வப்பழத்தோடு 50 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் காலை, மாலை ஒரு அவுன்சு வீதம் கொடுக்க உடனே குணமாகும்.