தேவைப்படும் பொருட்கள் :
5,12,2.5 அடி அகலம், நீளம், உயரம், உள்ளவாறு தொட்டி அமைக்கப்பட வேண்டும். தொட்டியின் அடியில் நீர் வெளியேற குழாய் இருப்பது நன்று.
1. மக்கிய குப்பைகள்
2. 1 சதா பஞ்சகவ்யா
3. சாணம்-10 கிலோ
கோமியம் -10 லிட்டர்
நீர் -100 லிட்டர்
கலந்த கலவை
4. தயிர்-1 லிட்டர்
கோமியம்-1 லிட்டர்
வெல்லப்பாகு-3 லிட்டர்
நீர்- 100 லிட்டர்
கலந்த கலவை
இடம் :
நிழல் உள்ள இடமாகவும், மழைநீர் விழாமலும், மேடாக உள்ள இடமாகச் செய்து கொள்ளவும்.
செய்முறை :
3 அடி அகலத்தில் தேவைக்கேற்ற நீளம் 1/2 அடி உயரம், இலை, தழை, குச்சிகள் முதலியவற்றை இடவும். 3-இல் இடம்பெற்றுள்ள கலவையுடன் 10 லிட்டருக்கு 100 லிட்டர் தண்ணீர் சேர்த்துப் பரப்பியுள்ள இலை தழைகளின் மேல் தெளிக்கவும். அதன் மேல் காய்ந்த சாணம் 1/2 அடி உயரம் பரப்பவும். அதன் மேல் 4- இல் இடம் பெற்றுள்ள கலவை 10லிட்டர் உடன் 100 லிட்டர் நீர் சேர்த்துத் தெளிக்கவும். இதே போல், ஐந்து அடுக்குப் போட்டு, தினம் தண்ணீர் தெளித்து வரவும். 20 நாள் கழித்து மண்வெட்டியால் அடுக்கு ஒன்றோடொன்று கலப்பதற்காக வெட்டி இடம் மாற்றி வைக்கவும்.போதுமான அளவுதண்ணீர் தொடர்ந்து தெளிக்கவும். அதன் மேல் 1 சத பஞ்சகவ்யா நன்கு நனையுமாறு தெளிக்கவும். 30ம் நாள் மண்புழு உணவு தயாராகிவிடும்.
நாம் கட்டியுள்ள தொட்டியில் 1/2 அடி நாம் தயாரித்துள்ள கம்போஸ்ட் இடவும். 1 சத பஞ்சகவ்யா நன்கு நனையுமாறு தெளிக்கவும். அதே போல் தொட்டி நிறையும் வரை இட்டு, பின்பு நீர் நனையுமாறு தெளிக்கவும். பின் சுமார் 5000 மண் புழுக்களை இடவும். தொட்டி மேல் வலை அமைப்பு ஏற்படுத்திக் கொள்ளவும். மழைநீர் படாதவாறு குடில்போல் அமைப்பு ஏற்படுத்திக் கொள்ளவும்.
தினம் ஒருமுறை தண்ணீர் தெளித்து வரவும். சுமார் 60-75 நாட்களில் மண்புழு உணவை(கம்போஸ்ட்) தின்று தன் கழிவுகளை வெளியேற்றி தொட்டியின் அடியில் செல்லதுவங்கிவிடும். அப்போது தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிட்டால், மண்புழுக்கள் தொட்டியின் அடியில் செல்ல துவங்கி விடும். பின்பு நாம் கழிவுகளை எடுத்து நிழலில் உலர்த்தி சற்று குளிர்ச்சியான இடத்தில சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.
பயன்கள்:
அனைத்துப் பயிர்களிலும் துரித வளர்ச்சிஉதவியால் பயிர் வாடாமலும், மண் காய்ந்து விடாமலும் இருத்தல்
மண் பொலபொலப்பு தன்மையுடன் இருத்தல், எந்த ஒரு இரசாயன உரங்களிலும் இல்லாத அளவிற்குப் பேருட்டங்களும், நுண் நூட்டங்களும் நிறைந்துள்ளது.
அவையாவன:
தழைச்சத்து , மணிச்சத்து, சாம்பல்சத்து, கந்தகம், இரும்பு, துத்தநாகம், மாங்கனீஸ், தாமிரம், சுண்ணாம்பு, சோடியம், பொட்டசியம், போரான், மாலிப்டினம், ஆகிய 3 பேருட்டம் மற்றும் 10 நுண்ணூட்டம் நிறைந்துள்ளது.