பஞ்சகவ்யா

தேவையான பொருட்கள்:

கடலைப் புண்ணாக்கு-1.5 கிலோ,
பசும்தயிர் (புளித்தது)-2 லிட்டர் ,
பசும்பால்-3 லிட்டர் ,
பசுங்கோமியம்-3 லிட்டர்,
பசுசானம்-5 கிலோ,
கரும்பு சாறு-2 லிட்டர்,
இளநீர்-2 லிட்டர்,
பதநீர்(கள்)-2 லிட்டர்,
வாழைப்பழம் -12

செய்முறை:

50 லிட்டர் கொள்ளளவு உள்ள மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் கேன் எடுத்துக்கொள்ளவும், கருப்பு சாறு கிடைக்காத பட்சத்தில் 1/2 கிலோ நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து 3 லிட்டர் நீரில் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும், பதநீர் கிடைக்காத பட்சத்தில் 100 கிராம் ஈஸ்டுடன் 2 லிட்டர் வெதுவெதுப்பான நீரை ஊற்றி வைத்துக்கொள்ளவும். கடலைப் புண்ணாக்கை 3 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊற வைத்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும், 50 லிட்டர் கேனில் கடலைப் புண்ணாக்கு கரைசல், கோமியம், இளநீர் சேர்க்கவும். வாழைப்பழத்தைப் பிசைந்து சேர்த்துக்கொள்ளவும். இப்போது ஈஸ்ட் நன்றாக பொங்கி வர ஆரம்பித்திருக்கும். இதையும் சேனில் சேர்க்கலாம், சர்க்கரை கலந்த நீரையும் சேர்த்துக் கலவையை இடதுபுறமாகவும், வலதுபுறமாகவும் நன்றாக கலக்கவும், இக்கலவையை தினந்தோறும் இருமுறைக்குக் குறையாமல் தொடர்ந்து நன்றாக கலக்கி வரவும்.

கலவையைக் கலந்த நாளிலிருந்து 20-ம் நாள் பயிருக்கு பயன்படுத்த பஞ்சகவ்யா தயார் ஆகிவிடும்.

இக்கலவையை ஆறு மதம் வரை பயன்படுத்தல்லாம். நாள் ஆக ஆக கலவை தரம் கூடும். கெட்டியானால் போதுமான நீர் சேர்த்துக் கலக்கப்பட வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

1. இக்கலவை 300 மிலி 10 லிட்டர் நீர் கலந்து பயிர் மற்றும் செடிகள் நன்கு நனையுமாறு அடிக்க வேண்டும். கை ஸ்பிரேயரில் நாசில் உள்ள துளையை சற்று பெரிய துளையாச் செய்து கொண்டால் அடைப்பு ஏற்படாமல் இருக்கும்.

2. இக்கலவை 100 மிலி உடன் 10 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து பாசன நீருடன் கலக்கலாம். மேலும் இதே அளவில் கலந்து கம்போஸ்ட் உரம் தயாரிக்கலாம்.

பத்து நாளைக்கு ஒரு முறை ஸ்பிரே செய்தால் மிகுந்த நன்மை கிடைக்கும். இக்கலவை 30 மில்லிக்கு 1 லிட்டர் நீர் என்ற விகிதத்தில் கலந்து கொண்டு விதை நனையும் அளவு கலந்து நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.

செடி முளைத்து 20 நாளைக்குப் பின் 10 நாட்களுக்கு ஒருமுறை ஸ்பிரே செய்யலாம். பூக்கள் வர ஆரம்பித்தவுடன் 15 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம். காய்ப்பு முடிந்த உடன் மீண்டும் 10 நாளுக்கு ஒரு முறை வீதம் தெளிக்க, காய்கறி மீண்டும் தழைத்துக் காய்க்கும்.

பயன்கள்:

இக்கலவை 75% வளர்ச்சி ஊக்கியாகவும் 25% பூச்சி நோய் எதிர்ப்பாகவும் பயன்படுகிறது. பஞ்சகவ்யா கலவையில் எண்ணற்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் மற்றும் அசோஸ்பைரில்லாம், பாஸ்போ பாக்டீரியா போன்ற பஞ்சானங்களும் மற்றும் எண்ணற்ற வளர்ச்சி ஊக்கிகளும் நிறைந்துள்ளன.

செடிகளில் இலைகளில் சுவை மாறுபடுவதால் பூச்சிகள் வருதல் தவிர்க்கப்படுகின்றது.

நோய்கள் முற்றிலும் வருவதில்லை. காய்கள் திரட்சியாகவும், அதிகமாகவும் காய்க்கின்றது. மேலும் சுவை மிகுந்துள்ளது.

Show Buttons
Hide Buttons