அவிபதி சூரணம்

தேவையான பொருட்கள்:

 

  1. சுக்கு-10கிராம்
  2. மிளகு-10கிராம்
  3. திப்பிலி-10கிராம்
  4. கடுக்காய்த் தோல்-10கிராம்
  5. தான்றிக்காய் தோல்-10கிராம்
  6. நெல்லி வற்றல்-10கிராம்
  7. கோரைக் கிழங்கு-10கிராம்
  8. கறியுப்பு-10கிராம்
  9. வாய்விளங்கம்-10கிராம்
  10. இலவங்கப்பத்திரி-10கிராம்
  11. கிராம்பு-110கிராம்
  12. கருப்புச்சிவிதை வேர் பட்டை-440கிராம்
  13. வெல்லம்-660கிராம்

செய்முறை:
வெல்லம் நீங்கலாக மற்றச் சரக்குகளை வெயிலில் காய வைத்துச் சிவதை வேரை மட்டும் தளியாகப் பசும்பாலில் வேகவைத்து எடுத்து உலர்த்திக் கொள்ளவேண்டும். நன்றாகக் காய்ந்த பிறகு எல்லாச் சரக்குகளையும் இடித்து, பொடித்து, சலித்து வெல்லத்தை கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
1/2 டீஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வேளை தண்ணீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

தீரும் நோய்கள்: சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு , எரிச்சல் ஆகியவைகள் குறையும்.

Show Buttons
Hide Buttons