பெருந்தும்பை இலையையும், பிரண்டை இலையையும் துளசிச் சாறு விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். கஸ்தூரி மஞ்சள், கருஞ்சீரகம், கோரோசனை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். மூலிகைச் சாறுடன் பொடி செய்த சூரணம் மூன்று கிராம் எடுத்து கலந்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் அடிக்கடி பேதியாவது குறையும்.