தேரை தோஷம்

குழந்தைக்கு உடம்பிலே சதை வற்றி எலும்பும் தோலுமாக இருக்கும். கைகால் சிறுத்துவிடும். உடல் வெளுத்து, வயிறு மட்டும் பெரிதாகிவிடும். கண் சிறுத்துவிடும். சோர்ந்திருக்கும்.பால் குடிக்காது. மலச்சிக்கல் உண்டாகும். பெருமூச்சு உண்டாகும். குரல் கம்மி அழும். இந்த நோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை செய்ய வேண்டும்.

மருந்து
சிறுபுள்ளடி சமூலம் – 75 கிராம்
சிறுகீரை சமூலம் – 75 கிராம்
நீராரைச் சமூலம் – 75 கிராம்
பொன்னாங்கண்ணிச் சமூலம் – 75 கிராம்
நீர்முள்ளிச் சமூலம் – 75 கிராம்
காட்டு மல்லிகை வேர் – 75 கிராம்
அவுரி வேர் – 75 கிராம்
கரிசலாங்கண்ணி வேர் – 75 கிராம்
நிலக்குமிழ் வேர் – 75 கிராம்
முடக்கத்தான் வேர் – 75 கிராம்

இவற்றை நன்றாக நைய இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சிய கசாயத்தில்

அதிமதுரம் – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
மிளகு – 10 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்

இவற்றை பசுவின் பால் விட்டு மை போல் அரைத்து கசாயத்துடன் கலக்கி அதில் பசுவின் நெய்
ஒரு லிட்டர் சேர்த்து காய்ச்சி வடித்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் கொடுத்து வரக் குணமாகும்.

உப்பு, புளி, கடுகு தள்ளுபடி பத்தியம்.

 

Show Buttons
Hide Buttons