குழந்தைக்கு சுரம் இருக்கும். அடிக்கடி மலம் தண்ணீர் போலக் கழியும். சில சமயம் மாவு போலவும், பச்சையாகவும். கழியும். வாந்தி உண்டாகும். முகம் வாடும்.கழுத்து மெலியும். குழந்தை அலறி அழும். நாக்கு வறண்டிருக்கும். சுவாசம் விடும்போது நெஞ்சு குழி விழும். இசிவு உண்டாகும். முகம் மஞ்சளாகத் தோன்றும். உடல் பச்சிலை நாற்றம் அடிக்கும். இந்த நோய் குழந்தை நடக்க ஆரம்பிக்கும் போது தான் ஏற்படுகிறது. இதுவே பறவை தோஷம் எனப்படும்.
மருந்து 1
ஓரிலைத் தாமரை – 15 கிராம்
விடத்தலா வேர் – 15 கிராம்
சுக்கு – 15 கிராம்
வெந்தயம் – 15 கிராம்
வால் மிளகு – 15 கிராம்
இவற்றை ஒன்று சேர்த்துத் தட்டி அரை லிட்டர் நீரிலிட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் வேலைக்கு ஒரு அவுன்சு வீதம் கொடுக்க குணமாகும்.
மருந்து 2
மணத்தக்காளி வேர் – 15 கிராம்
பிச்சி வேர் – 15 கிராம்
வெங்காயம் – 15 கிராம்
சிற்றாமணக்கு எண்ணெய் – 1/4 லிட்டர்
மூலிகைகளை பொடி செய்து எண்ணெயில் போட்டு காய்ச்சி வடித்து ஒரு தேக்கரண்டி வீதம் உள்ளுக்குள் கொடுத்து தலை உச்சியிலும் தடவி வர வேண்டும்.