குழந்தைக்கு சுரத்துடன் வயிற்றோட்டமும், வாந்தியும் இருக்கும். தூங்குவதைப் போலவே மயங்கி படுத்திருக்கும். நாவறட்சி உண்டாகும். கண்விழி மேல்நோக்கி சொருகி பல் கடிப்பு உண்டாகும்.
மருந்து
வசம்பு – 15 கிராம்
ஓமம் – 15 கிராம்
ஏலக்காய் – 15 கிராம்
சுக்கு – 15 கிராம்
மஞ்சள் – 15 கிராம்
குட்டி விளாயிலை – 30 கிராம்
பேய்ப் பீர்க்கம் வேர் – 15 கிராம்
இவற்றை நன்றாக நைய நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம், ஒரு குன்றிமணி அளவு கோரோசனையைக் கரைத்து கொடுக்க குணமாகும்.
மேற்ப்படி மருந்துகளை துளசிச் சாற்றில் அரைத்து உடம்பில் பூசி மாலையில் சுடுநீரில் குளிப்பாட்டலாம்.