காதுவலிக்கு ‘மருளை’ வாட்டிக் காதில் மூன்று, நான்கு சொட்டுகள் விழும்படி சாறு பிழிய வேண்டும். வலி நிற்கும். குழந்தையும் அயர்ந்து தூங்கும்.
மருள் கத்தாழை இலை போல நீண்டு, ஆனால் வற்றியும், கெட்டியாகவும் இருக்கும். இந்த மடலை பிய்த்து ஒரு மடலைச் சிறிது அடுப்பில் இரண்டு நிமிடம் வைத்தால் மடல் வதங்கி உள்ளே இருக்கும் சாறு பிழிய பக்குவமாக இருக்கும்.