புளிய இலையை மாலை நேரத்தில் எடுத்து வந்து சாதம் வடித்து கஞ்சியில் போட்டு மூழ்கச் செய்து மறுநாள் காலையில் எடுத்து இறுகப்பிழிந்து ஒரு கைப்பிடியளவு இலையை மட்டும் எடுத்து அம்மியில் வைத்து நெகிழ அரைத்து அத்துடன் பாக்களவு சிற்றரத்தையை வைத்து அரைத்து சாறு பிழிந்து கொள்ளவேண்டும். அந்த சாற்றை எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து 21 நாட்கள் காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் சுவாச காசம் குறையும்.