கோரோசனை மாத்திரை

கோரோசனை – 15 கிராம்
குங்குமப் பூ – 30 கிராம்
கற்பூரம் – 15 கிராம்
பச்சைக் கற்பூரம் – 15 கிராம்
ஏலம் – 15 கிராம்
கிராம்பு – 15 கிராம்
கோஷ்டம் – 15 கிராம்
அக்ரகாரம் – 15 கிராம்
கடுக்காய்த் தூள் – 30 கிராம்

ஒன்று சேர்த்துச் சந்தனக் கசாயத்தில் நன்றாக மை போல அரைத்து உளுந்து அளவு மாதிரிகளாக உருட்டி நிழலில் உலர்த்தி சீசாவில் பத்திரப்படுத்தவும்.

இதை குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தைக்கு – 1 மாத்திரை அளவு

5 வயதுக்கு உட்பட்டவை 1/2 மாத்திரை

தாய்மார்களுக்கு 1’1/2, 2 மாத்திரை

உபயோகம் : சுரம், மாந்தம், கணைநோய் முதலிய நோய்கள் குணமாகும்.

அனுபானம் (துணைமருந்து) : தாய்ப்பால்

 

Show Buttons
Hide Buttons