குழந்தைக்குப் பல் முளைக்கும்போது அற்பச் சுரம் காணும். குழந்தை ஈரத்தில் நடமாடினாலும், சீரணிக்காத ஆகாரகக் கோளாறினாலும் அற்பச் சுரம் உண்டாகும்.
குழந்தைக்கு உடம்பு அசதி, சோர்வு, பசிமந்தம், நாவறட்சி, தலை, நெற்றி முதலிய இடங்களில் வலியும் இருக்கும். சிறுநீர் எரிச்சல் இருக்கும். குழந்தை அழும். சிறுநீர் மஞ்சள் நிறமாக இருக்கும். நாக்கில் மாவு படிந்திருக்கும். தொண்டைப் புகைச்சல், இருமல் இருக்கும். நாடி தீவிரமாக இருக்கும். காலையில் சுரம் நிதானமாக இருந்து இரவில் சற்று கூடுதலாய் இருக்கும்.
மருந்து 1
விஷ்ணுகிரந்தி – 15 கிராம்
சுக்கு – 15 கிராம்
கடுக்காய் – 15 கிராம்
இண்டு – 15 கிராம்
வாதுமை – 15 கிராம்
இவற்றை ஒன்று சேர்த்து அரை லிட்டர் நீரிலிட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக்க காய்ச்சிய கசாயத்தை சீசாவில் பத்திரப்படுத்தவும்.
மருந்து 2
காய்ந்த ஆடுதீண்டாப் பாளைவேர் – 30 கிராம்
மேற்படி பட்டை – 30 கிராம்
கருவாப் பட்டை – 30 கிராம்
இவற்றை ஒன்று சேர்த்து எலுமிச்சம்பழச் சாற்றினால் மைபோல அரைத்து குன்றிமணி அளவ மாத்திரைகள் செய்து நிழலில் காய வைத்து சீசாவில் பத்திரப்படுத்தவும்.
இந்த மாத்திரையில் காலை, மாலை ஒன்று வீதம் கசாயம் ஒரு அவுன்சில் சேர்த்து கொடுத்து வரவும்.