அஜீரணச் சுரம்

குழந்தைக்கு ஆகாரக் கோளாறினால் வருவதே அஜீரணச் சுரமாகும். வயிற்றில் புளிப்பு உண்டாகி பசிமந்தம், விக்கல்,கொட்டாவி, சுரத்துடன் காணும்.

மருந்து

சுக்கு – 15 கிராம்
மிளகு – 15 கிராம்
ஓமம் – 15 கிராம்
நுணா இலை – 30 கிராம்
வேப்பங்கொழுந்து – 30 கிராம்

சட்டியில் நுணாஇலை,வேப்பங்கொழுந்து இவற்றை போட்டு வறுத்து சிவந்து வரும் சமயத்தில் மற்றவையும் பொடி செய்து போட்டு ஒரு லிட்டர் நீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் காலை மாலை கொடுக்க குணம் ஆகும்.

Show Buttons
Hide Buttons