தேவையான பொருள்கள்:
நொச்சி இலை, சோற்றுக்கற்றாழை, பீநாரி இலை, எருக்கு இலை, வேம்பு இலை, நெய்வேலி காட்டாமணக்கு, புங்கன், ஆடு தின்னா பாலை, கிளரிசெடியா, அரளி, தும்பை, துளசி, செம்பருத்தி, மருதாணி, பப்பாளி, ஆமணக்கு. ஊமத்தை, சீத்தா இலை, ஆடாதோடா.
செய்முறை :
மேற்கண்ட இலைகளில் 5 இலைகளை சம அளவில் 2 கிலோ எடையில் எடுத்து, இடித்து பின் அதனுடன் 10 லிட்டர் கோமியம் சேர்த்து கலந்து வைத்து 7 நாட்களுக்கு பின் பயன்படுத்தலாம்.
500 மி. லிட்டர் கலவை 10 லிட்டர் நீர் சேர்த்து கை ஸ்பிரேயரில் அடிக்கலாம். இக்கலவையை 3 மதங்கள் வரை பயன்படுத்தலாம்.
பயன்கள் :
அனைத்து வகை பூச்சிகளையும் கட்டுப்படுத்தும், மேலும் 75% பூச்சி நோய் தடுப்பாகவும், 25% வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது.மேலும் இதில் அனுபவத்திற்கு ஏற்ப இலைகளை மாற்றி, மாற்றி பயன்படுத்தலாம்.