தேவையான பொருட்கள்:
பசு சாணம் -10 கிலோ
பசு கோமியம் – 10 லிட்டர்
நாட்டுச் சர்க்கரை -250 கிராம்
தண்ணீர் – 10 லிட்டர்
செய்முறை :
சாணம், கோமியம் நன்கு கரைத்து, பின் சர்க்கரை சேர்த்து, பெரிய தொட்டியில் இட்டு இதனுடன் 100 லிட்டர் நீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்து 10% கரைசலாக பாசன தண்ணீருடன் கலந்து பாய்ச்சலாம்.
பயன் :
இது மண்ணிற்கும், பயிர்களுக்கும் மற்றும் நுண்ணுயிரி பாக்டீரியா வளரவும் பேருதவி புரிகிறது.