தொண்டைப்புண் குணமாக
மாதுளம்பூவை காயவைத்து பின் மாதுளம்பட்டையுடன் சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாதுளம்பூவை காயவைத்து பின் மாதுளம்பட்டையுடன் சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் குணமாகும்.
கடுக்கை தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கி கொள்ளவும்.ஊறிய உமிழ் நீரை விழுங்கி வந்தால் குரல் மாற்றம் குணமாகும்.
கோடக இலையை கஷாயமாக்கி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண், உதடு ரணம், நாக்குப்புண் ஆகியவை குணமாகும்.
மா இலை பொடியை 1 கிராம் அளவு எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் குரல் கம்மல் குணமாகும்.
மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பெண்ணெய் கலந்து மைய அரைத்து தடவலாம்.
தூதுவளை இலை, வேர், பூ, காய் ஆகியவற்றை கொதிக்க வைத்து கஷாயம் செய்து பாலில் சாப்பிட்டு வரவும்.
நீர்முள்ளி விதையை பொடி செய்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் இரைப்பிருமல் தீரும்.
இலந்தை பழத்தை மிச்சியில் அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகி வர மூளை பதட்டத்தை நீக்கும்.இயற்கை தூக்கம் தருகிறது.
காஞ்சர மஞ்சளை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தடவி வர உள்காயம் குணமாகும்.