காய்ச்சல் குறைய
கறிவேம்பு இலைகளை கசாயம் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் உடல் வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கறிவேம்பு இலைகளை கசாயம் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் உடல் வலி குறையும்.
நன்கு கொதிக்கும் பாலில் அரச மர இலைக் கொழுந்தை சிறிதளவு சேர்த்து, சர்க்கரை கலந்து குடித்து வந்தால் சுரம் குறையும்.
கருந்துளசி இலைகளை நீரில் ஊற வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.
கருநொச்சி இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு நாள் மூன்று வேளை குடித்தால் காய்ச்சல் குறையும்.
நான்கு இலந்தை இலைகளை எடுத்து அதனுடன் மூன்று மிளகு, இரண்டு பூண்டு சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் குடித்தால் காய்ச்சல் குறையும்.
அமுக்கிராங்கிழங்கு இலைகளை நீரில் ஊற வைத்து ஒரு அவுன்சு நீரைக் குடித்து வந்தால் சுரம் குறையும்.
பாரிஜாத இலைகளைச் சுடுநீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து , நீரை வடிகட்டி ஒரு அவுன்சு வீதம் காலை,மாலை குடித்து வந்தால்...
வில்வமர இலையை சாறு எடுத்து 1 கப் நீரில் கலந்து பருக காய்ச்சல், உடல் அசதி குறையும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் வெண் நொச்சி இலைகளைப் போட்டு நீராவி பிடிக்க வியர்வை வெளியேறும்.சிறிது நேரத்தில் காய்ச்சல் குறையும்.
பத்து நாயுருவி இலைகளை எடுத்து அதனுடன் நான்கு மிளகு,மூன்று பூண்டு மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்து உருட்டிக் காய்ந்த பின்...