அடிபட்ட வீக்கம் குணமாக
மஞ்சநத்தி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை நல்லெண்ணெயில் வதக்கி அதை ஒரு சிறு துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்துப்...
வாழ்வியல் வழிகாட்டி
மஞ்சநத்தி இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை நல்லெண்ணெயில் வதக்கி அதை ஒரு சிறு துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்துப்...
வெடிக்காய் இலையை தண்ணீர் விட்டு அரைத்து காயம் பட்ட இடத்தில் வைத்து கட்டிவர வெட்டுக்காயம் ஆறும்.புண்கள் ஆறியபின் தேங்காய் எண்ணெய் தடவவும்.
காஞ்சர மஞ்சளை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தடவி வர உள்காயம் குணமாகும்.
கடுக்காய் பொடியை சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து போட்டால் சாதாரண புண்கள் மற்றும் காயங்கள் குணமாகும்.
பெருங்காயத்துடன் வேப்பிலை சேர்த்து மைய அரைத்து காயத்தில் மீது தடவி வர குணமாகும்.
குப்பைமேனிஇலையை அரைத்து வெட்டுக்காய புண் மீது போட்டால் புண் அழுகாமல் இருக்கும்
இலந்தை இலையை மைய அரைத்து காயத்தின் மீது பற்று போட்டு வந்தால் வெட்டுக்காயம் குணமாகும்.
பிரண்டை எண்ணெய்யை தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.வெட்டுகாயம் சீக்கிரம் ஆறும்.
காயம் ஏற்பட்டு இரத்தபெருக்கு நிற்க நெல்லிக்காய் பொடி பூச இரத்தம் உறைந்து நிற்கும்.