பசியின்மை குறைய
சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவைகளை தண்ணீர் விட்டு வேகவைத்து அதனுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவைகளை தண்ணீர் விட்டு வேகவைத்து அதனுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
துளசி விதை மற்றும் திப்பிலி இரண்டையும் பொடி செய்து வைத்து கொண்டு 1 ஸ்பூன் அளவு தினமும் இரவு சாப்பிட்டு வெந்நீர்...
சுக்கான் கீரையை சுத்தம் செய்து பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து சட்னி போல செய்து உணவுடன்...
சீரகத்தை பொன் வருவலாக வறுத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் , இருமல் குணமாகும்.
வெற்றிலைச்சாறு எடுத்து அதனுடன் சுக்கு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.
மஞ்சள் பொடியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி சிறிதளவு சர்க்கரைச் சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.
அரைக்கீரையுடன் மிளகு பொடி சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர ஜலதோஷம் குறையும்.
வில்வமர இலையை சாறு எடுத்து வெந்நீர் அல்லது தேன் சேர்த்து பருகி வந்தால் சளி, ஜலதோஷம் குறையும்.
நல்ல மிளகு இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு அவுன்சு குடித்து வந்தால் தலைக்கனம் மற்றும் ஜலதோஷம் குறையும்.