பசி உண்டாக
ஆதண்டை இலையை நெய்யில் வதக்கித் துவையலாக்கி உணவுடன் சேர்த்துக் கொண்டால் பசியின்மை நீங்கி பசி உண்டாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆதண்டை இலையை நெய்யில் வதக்கித் துவையலாக்கி உணவுடன் சேர்த்துக் கொண்டால் பசியின்மை நீங்கி பசி உண்டாகும்.
இலந்தை வேர்ப்பட்டையைப் பொடி 4 சிட்டிகை அளவு எடுத்து வெந்நீருடன் இரவில் குடிக்க பசியின்மை நீங்கும்
கை பிடியளவு கல்யாண முருங்கை இலையை எடுத்து சாறு பிழிந்து 1 டீஸ்பூன் வெந்நீரில் கலந்து குடித்தால் பசி எடுக்கும்.
தக்காளி பழச்சாறுடன் கேரட் சாறு மற்றும் ஆப்பிள் பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தோலின் இயற்கை நிறத்தை பாதுகாக்கும். வாய் துர்நாற்றம்...
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சைபழச்சாறு 3 பங்கு இவற்றுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பருகிவந்தால் பசியின்மை குறையும்.
நெருஞ்சில் இலையை சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை காய்ச்சி அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
கொட்டைப் பாக்குடன் சிறிது கிராம்பு சேர்த்துப் பொடி செய்து சாப்பாட்டிற்குப் பின் வாயிலிட்டு பின் துப்பி விட வாய் நாற்றம் குறையும்
கண்டங்கத்திரியின் பழத்தை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளை அருந்தி வந்தால் நல்ல பசி எடுக்கும்.