வைத்தியம்
உடல் எரிச்சல் குறைய
பிரண்டை இலையுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.
சொறி குறைய
விழுதி இலைகளை நன்கு அரைத்து கரப்பான், சொறி மேல் தேய்த்து அரைமணி நேரம் ஊறிய பின் கழுவி வந்தால் அவை குறையும்.
உடல் ஆரோக்கியம் பெற
பருப்புக் கீரையுடன், குடை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அவித்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும்.
வியர்வை நாற்றம் குறைய
சிற்றரத்தை இலைத் தாள்களைத் துண்டு துண்டாக நறுக்கிச் சுடு நீரிலிட்டுக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் குறையும்.
புண்கள் குறைய
பண்ணைக் கீரையை அரைத்துச் சாறு எடுத்து, புண்கள் மீது தடவினால் புண்கள் குறையும்.
உடல் பலம் அதிகரிக்க
பிண்ணாக்குக் கீரை சாறில் அமுக்கரா கிழங்கை ஊற வைத்து, பிறகு காய வைத்துப் பொடியாக்கிச் சாப்பிட்டால், உடல் பலம் அதிகரிக்கும்.
உடல்தசைகள் வலுப்பெற
அவலைப் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலின் திசுக்களுக்கு ஊட்டம் கிடைப்பதோடு, தசைகள் வலுப்பெறும்.