காய்ச்சல் குறைய
நான்கு இலந்தை இலைகளை எடுத்து அதனுடன் மூன்று மிளகு, இரண்டு பூண்டு சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் குடித்தால் காய்ச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நான்கு இலந்தை இலைகளை எடுத்து அதனுடன் மூன்று மிளகு, இரண்டு பூண்டு சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் குடித்தால் காய்ச்சல் குறையும்.
அமுக்கிராங்கிழங்கு இலைகளை நீரில் ஊற வைத்து ஒரு அவுன்சு நீரைக் குடித்து வந்தால் சுரம் குறையும்.
தும்பை இலைகளை அரைத்து சொறி, சிரங்கு மேல் பூசி வந்தால் சொறி, சிரங்கு குறையும்.
நஞ்சறுப்பான் இலைகளை உலர்த்தி பொடி செய்து நீரில் குழைத்து பூசினால் வலி, வீக்கம் குறையும்.
கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
மாசிக்காயை சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து பித்த வெடிப்பில் பூசி வந்தால் வெடிப்பு குறையும்.
வசம்புத் தூளைக் கொதி நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து அரிப்பின் போது அரை அவுன்சு வீதம் மூன்று...
சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம் மீது கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
விளாமிச்சை வேரை நீரிலிட்டு நன்றாகக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் பித்தம் குறையும்.