தோல் நோய்கள் குறைய
வேம்பின் பட்டை,பூவரசம் பட்டை இரண்டையும் தூள் செய்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேம்பின் பட்டை,பூவரசம் பட்டை இரண்டையும் தூள் செய்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குறையும்.
புளியாரை இலைச்சாறில், சிறிதளவு மிளகு தூள் கலந்து, சிறிதளவு வெண்ணெய் சேர்த்துக் குழைத்து பாலுண்ணி மேல் தேய்க்கப் பாலுண்ணிகள் குறைந்து விடும்.
2 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் இரண்டு மெல்லிய இஞ்சி துண்டுகள் கால் தேக்கரண்டி சீரகம் கால் தேக்கரண்டி சோம்பு இரண்டு...
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து...
வேப்பிலையோடு மஞ்சள்,கற்பூரம் சேர்த்து அரைத்து கட்டிகள் மேல் பூசி வர கட்டிகள் பழுத்து உடையும்.
ஊமத்தை இலையை அரைத்து அதனுடன் சிறிது அரிசி மாவையும் சேர்த்து கட்டிகள் மேல் கட்டி வந்தால் கட்டிகள் குறையும்.
வேப்ப இலையுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் கட்ட வெட்டுப்பட்ட காயம் குறையும்.
ஆவாரங் கொழுந்து, அல்லி இலை இவற்றை அரிசி களைந்த நீர் சேர்த்து அரைத்துப் பூச அக்கிக் கொப்புளங்கள் குறையும்.
சிறிதளவு தர்ப்பூசணி நீரை எடுத்து வேர்க்குரு மீது தடவினால் வேர்க்குரு குறையும்.
கடுக்காயையும் மஞ்சளையும் சம அளவு எடுத்து அரைத்துப் பூச புண்கள் குறையும்.